Friday, October 9, 2009

திருவரங்க யாத்திரை




முன்பு திருவரங்கம் சென்றோம். அதன் விஷயமானதே இது. திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம் என்றாலே மனதில் ஒரு உற்சாகம்! திருவரங்கம் அடைய முதலிலே திருச்சிராப்பள்ளிக்கு பயணம் செய்ய வேண்டும். அதற்கு "ROCKFORT EXPRESS" ரயில் வண்டி. மாம்பலத்தில் புறப்பட்டு திருச்சி வரை செல்லும் ரயில் அது. மாம்பலத்திற்கு "போய் வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டு ரயிலிலே ஏறினோம்!
படுத்து எழுந்தால் திருச்சி வந்துவிடும்! அங்கிருந்து பேருந்தில் பயணம் செய்தால் ஸ்ரீரங்கம் என்ற என்னதோடே உறக்கம். ரயிலும் புறப்பட்டது. திருவரங்கத்தை தாண்டியே திருச்சி. ஆகவே திருவரங்கம் ராஜகோபுரத்தை அங்கிருந்தே காணலாம். மின் விளக்குகளால் அலங்கரிக்க்பபட்ட அழகிய கோபுரம்! இத்தேசத்தின் மிக பெரிய கோபுரம்!
பின்பு திருச்சியை அடைந்தோம்! அங்கே உறவினர் வீட்டுக்கு சென்று நீராடிவிட்டு தயாரானோம்! அடுத்து திருவரங்கதிற்கான பேருந்து தான்! "இதோ இப்பொழுதே உம்மை அழைத்து செல்கிறேன்" ஏன்னு கூறுமாபோலே விரைந்து வந்தது பேருந்து! மனதில் மீண்டும் உற்சாகம்!
காவிரி ஆற்றின் பாலம்! மீண்டும் அங்கிருந்து கோபுர தரிசனம்! திருவரங்கம் என்றால் என்ன என்பதை விளக்கும் விதமாக இருந்த அந்த இயற்கை காட்சி! எவ்வளவு அழகிய நகரம் திருவரங்கம்!
" வண்டின முரலும் சோலை
மயிலினம் ஆலும் சோலை
கொண்டல்மீ தனவும் சோலை
குயிலினம் கூவும் சோலை,
அண்டர்கோ னமரும் சோலை
அணிதிரு வரங்க மென்னா "
என்று அழ்வார் சாதித்தார்.
திருவரங்கம் சேர்ந்தோம்! தெற்கு ராஜகோபுர வாசலில் இறங்கினோம். ஒவ்வொரு கோபுரத்தை கடந்து "ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா" என்று இருக்கும் அந்த உத்தர வீதி கோபுரத்தை அடைந்தோம்! அங்கிருந்து திருக்கோவில் தொடக்கம். அழகிய மதில் சுவர்கள்!
முதலிலே கருடாழ்வார் சந்நிதி. இக்கோவில் கருடன் மூர்த்தி மிகவும் பெரிது! திருவரங்கம் என்றாலே பெரியது தான்! கோவிலோ பெரிய கோவில். பெருமாளோ பெரிய பெருமாள்! நாச்சியாரோ பெரிய பிராட்டியார். மண்டபமோ பெரிய திருமாமணி மண்டபம். உற்சவமோ பெரிய திருநாள். இது மூன்றாம் பிரஹாராம்! அங்கிருந்து ஸ்ரீரங்க நாச்சியார் சந்நிதி. அங்கே 5 குழி 3 வாசல் சேவை! அருகே சேஷராயர் மண்டபம், ஆயிரம்கால் மண்டபம் சொர்க்க வாசல் மற்றும் வெள்ளை கோபுரங்களின் அழகை ரசித்துகொண்டோம்! பின்பு வலம் செய்து முதல் பிரகாரத்தை அடைந்தோம். அங்கே தெற்கு கோபுர வாசல் - "நாழிகேட்டான் வாசல்" .
கிளி மண்டபம்/அர்ஜுனா மண்டபத்தை கடந்தால் அழகிய மணவாளன் சந்நிதி. வாசலிலே ஜெயன்-விஜயன் த்வாரபாலகர்கள்.
நாயகனாய்நின்ற நந்தகோப னுடைய
கோயில் காப்பானே ! கொடிதொன்றுன் தோரண
வாயில் காப்பானே !
என்ற பாசுரம் நினைவுக்கு வந்தது.
அடுத்தது பெரிய பெருமாளின் சேவை! அவரே பெரிய பெருமாள். அவரே அழகிய மணவாளன். அவரே ரங்கராஜன். இவ்வையத்தை படைத்தவன். நான்முகக்கடவுள் பிரம்மாவை படைத்தவர்! அவ்வளவு ஆச்சர்யமான சேவை! ஸ்ரீரங்கநாதன் கிடந்த திருக்கோலம்!
குடை திசை முடியை வைத்து, குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டி, தென் திசை இலங்கை நோக்கி !
என்ற பாசுரத்தின்படி சயணம்! அவரை கண்டாலே உடல் உருகி போகும்! அவ்வளவு அழகான திருமேனியை கொண்டவர்! பவள பாதகங்கள்! அஞ்சண வண்ணன்! கமலச்செங்கன்! அவருடைய பார்வை காவிரி ஆற்றை போன்றது! நம்மை அடித்து சென்றுவிடும் அதற்காக அவர் சந்நிதி முன் இரண்டு தூண்கள்!
கூடவே உற்சவ மூர்த்தியான நம்பெருமாளின் சேவை! அழகையே உருவமாக கொண்டவர்!
எழில் உடைய அம்மனைமீர் ! என்னரங்கத்து இன்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழகர்
என்று அவர் அழகை வர்ணிக்கும் பாசுரம்.
நம்பெருமாளின் திருமேனியிலே ரத்னங்கள். திருமுடி மேல் பாண்டியன் கொண்டை! நேற்றிலே அழகிய கஸ்துரி திலகம்! திருமுடியிலிருந்து திருவடிவரை வர்ண தோமாலை!
பின்பு அந்த பிராகாரத்தை வளம் வந்தால் ஸ்ரீரங்க விமானம். அர்ச்சுதன், அநந்தன் மற்றும் கோவிந்தனை கொண்ட ஓம் வடிவதொடே இருக்கக்கூடிய ப்ரனவாக்கார விமானம். மேலும் துலுக்க நாச்சியார் சந்நிதியும் கண்டோம்.
இவ்வளவு வைபவம் கொண்ட திவ்ய தேசத்தை விட்டு புறப்பட தான் வேண்டுமோ? என்ற எண்ணம் மனதில் !
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருளானே !
என்று ஆழ்வார் சாதித்தார் அங்கேயே இருந்து விட முடியாதா?
என்னால் இயன்றது திரும்பும்பொழுது ராஜகோபுரத்தையே பார்ப்பது தான்!
- ஸ்ரீகிருஷ்ணன்

4 comments:

  1. did you wrtie this really??? in tamil??or a copy paste??

    ReplyDelete
  2. rightly said by some poet,
    அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்
    அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
    தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

    An experience that one can only feel,is brightly portrayed :-)good work!

    ReplyDelete
  3. Hi krishna, how did you manage to post this in tamil? can you let me know please? i need to know this urgently. thanks.

    ReplyDelete
  4. it is using google transliterate :)

    ReplyDelete